Wednesday, July 7, 2010

விஸ்வகர்ம மக்களின் வாக்கே பலம் பொருந்தியது
விஸ்வகர்ம மக்களே விழித்தெழுவோம்!

சாதி மத வேற்றுமை பார்க்காமல் இந்த உலகம் தோன்றியது முதல் அனைத்து மக்களும் வாழ தொழில் கருவிகளை செய்து கொடுத்ததுடன், மக்களின் தெய்வங்களை அழகாக படைத்து வழிபட சிலைகளை உருவாக்கி கொடுத்தது வரை விஸ்வகர்மா இன மக்களின் சமூக வளர்ச்சிக்கான பங்கு அளவிட முடியாதது. அடிப்படையில் சாதி தோன்றாத காலத்தில் இந்த தொழில்களில் ஈடுபட்ட மக்கள் பின்னர் விஸ்வகர்மாக்கள் என்ற பெயரில் இணைந்தனர். இன்று வரை அவர்களுக்கிடையேயான உறவு திருமணங்கள் மூலம் தொடர்ச்சியான சமுதாய வளர்ச்சியாக பெருகி வருகிறது.
விஸ்வகர்ம சமுதாய மக்களின் வீரத்தையும் விவேகத்தையும் வளர்ச்சியையும் விரும்பாத சில சமூக விரோத சக்திகள் விஸ்வகர்ம ஐந்து தொழிலாளர்கள் சாபம் பெற்று விட்டதாகவும் அதனால் சாப விமோசனம் பெறவேண்டும் என்றும் கட்டுக்கதை விட்டு வருகின்றனர்.
"விஸ்வபோதத்தில், சிவஸ்யபாலநேத்ராக்ணி சாபோர் கெளதமசன்முனே, ஹேவியர்த்தாம் யாதினோ பைதி-விஸ்வகர்ம விரோத வாக்கு விஷ்னோ சக்ரவஜ்ந் வஜ்ரம், பிரமாஸ்திரம், கால தண்டம்,சுதாசித்விபல துவஸ்யா-நவிரோ தோகிசில் பினவா" என வரும் இச்சுலோகத்தால், சிவனுடைய மூன்றாம் கண்ணும், கெளதமர் சாபமும் வியர்த்தமாயின. ஆனால் விஸ்வகர்ம சிற்பியின் விரோத வாக்கு, விஷ்ணுவின் சக்ராயுதத்தையும், காலதண்டத்தையும், பிரம்மாஸ்திரத்தையும் விட மிகப் பலம் பொருந்திய தெனப் போற்றப்படுவதாம்.

விஸ்வபிரம்மா துதி




பஞ்சவர்ணம் கொஞ்சு முகம் ஐந்து பேர்கள்
பரமனுடைய திருக்கண்ணில் உதயமானார்
கொஞ்சிவரும் கிளிமொழியாள் உமையாள் புத்திரர்
குருவான மனு-மயா-துவஷ்ட்டா-சிற்பி-விஸ்வஞ்ஞ
என்றும் விஞ்சையுடன் தேவர்களுக்கும் தொழில் வகுத்து விஸ்வகர்மா
னென்னுமே நாமம் பெற்று தஞ்சமுடன் இவர்கள் ஐந்து பேர்களையும் சகல கலை வென்று சாற்றினார் காண்